• Fri. Jun 26th, 2026

24×7 Live News

Apdin News

குணால் ஷா: வாட்ஸ்ஆப் தலைமை பொறுப்புக்கு வந்த இந்தியர் – முழு பின்னணி என்ன?

Byadmin

Jun 24, 2026


குணால் ஷா: வாட்ஸ்ஆப்-இன் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள இந்திய தொழிலதிபர்

பட மூலாதாரம், CRED

படக்குறிப்பு, இந்திய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான கிரெட்டின் (CRED) நிறுவனர் குணால் ஷா வாட்ஸ்ஆப்-இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

சமீப காலம் வரை குணால் ஷாவின் பெயர் முக்கியமாக இந்தியாவின் ஸ்டார்ட்ஆப் மற்றும் முதலீட்டாளர்கள் உலகுக்குள் மட்டுமே இருந்தது.

ஃபின்டெக் நிறுவனமான ‘கிரெட்’-இன் நிறுவனர் ஷா, தனது வணிகத்துக்கு அப்பாலும் வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

தனது பாட்காஸ்ட்டில் (ஒலிப்பதிவு) அவர் பெரும்பாலும் நம்பிக்கை, ஊக்கம், சொத்து உருவாக்கம் மற்றும் மனித நடத்தை போன்றவற்றைப் பற்றி பேசுகிறார். சமூக ஊடகங்களில் அவரது பதிவுகள் செயற்கை நுண்ணறிவு முதல் தத்துவம் வரையிலான தலைப்புகளைத் தொடுகின்றன.

இப்போது, மெட்டா நிறுவனம் அவருக்கு வாட்ஸ்ஆப்-இன் பொறுப்பை ஒப்படைத்து அவரை உலகளாவிய தலைப்புச் செய்திகளில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நியமனம் மெட்டா நிறுவனம் ‘கிரெட்’ இல் 900 மில்லியன் டாலர் முதலீடு செய்த பிறகு நடந்துள்ளது.

வெறும் மெசேஜிங் (செய்தி அனுப்புதல்) உடன் மட்டும் நின்றுவிடாமல் கட்டணம் செலுத்துதல், வணிக சேவைகள் மற்றும் ஏஐ சார்ந்த தயாரிப்புகளை நோக்கி விரிவடைய வாட்ஸ்ஆப் விரும்பும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

By admin