• Fri. Jun 26th, 2026

24×7 Live News

Apdin News

பணியாளர்களின் பாதுகாப்புக்காக இங்கிலாந்து முழுவதும் குப்பை சேகரிப்பு நேரங்களில் மாற்றம்

Byadmin

Jun 26, 2026


இங்கிலாந்து முழுவதும் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் குப்பை சேகரிப்பு நேரங்களை மாற்றியமைத்து வருகின்றன.

வெப்பநிலை 40°C வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் பல இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலையில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய செல்தன்ஹாம் (Cheltenham), சோமர்செட் (Somerset) மற்றும் பிரிஸ்டல் (Bristol) உள்ளிட்ட பல உள்ளுராட்சி அமைப்புகள், அதிகாலை 4 மணி முதலே குப்பை சேகரிப்பைத் தொடங்குகின்றன.

தெற்கு குளோசெஸ்டர்ஷயர் (Gloucestershire ) மற்றும் ஷிராப்ஷயர் (Shropshire) போன்ற சில உள்ளுராட்சி மன்றங்கள், குறிப்பிட்ட சில வகை கழிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

மாற்றியமைக்கப்பட்ட சேகரிப்பு நேரங்களுக்கு ஏற்ப, குடியிருப்பாளர்கள் தங்களது குப்பைத் தொட்டிகளை வழக்கத்தை விட முன்னதாகவே வெளியே வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

By admin