• Sun. Nov 1st, 2026

24×7 Live News

Apdin News

சுருக்கங்களைக் குறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் 3 வகை உணவுகள்

Byadmin

Nov 1, 2026


உங்கள் தோலை இளமையாக வைத்திருக்க உதவும் 3 வித உணவுகள் இவைதான்

    • எழுதியவர், மெலிசா ஹோகன்பூம்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு சருமம். அது நமது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்க வேண்டிய ஒன்று. நம்மை இளமையாகத் தோற்றமளிக்கச் செய்வது மட்டுமின்றி, நன்கு பராமரிக்கப்படும் சருமம் நமது ஒட்டுமொத்த உடல்நலத்துக்கும் பல வழிகளில் நன்மை அளிக்கிறது.

ஆனால், நமது உடலுக்கும் வெளி உலகத்துக்கும் இடையிலான பாதுகாப்பு அரணாக இருக்கும் சருமம் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கிறது. காற்று மாசுபாடு, ஓசோன் மற்றும் மாறிவரும் பருவநிலை உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் காரணிகள் சருமத்தின் முதுமைத் தோற்றத்துக்குப் பங்களிக்கின்றன என்கிறார் சுற்றுச்சூழல் மருத்துவத்துக்கான லைப்னிஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தோல் மருத்துவப் பேராசிரியர் ஜீன் க்ருட்மன்.

“பல தசாப்தங்களாக, சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படும் சரும முதுமைக்கு புற ஊதாக் கதிர்களே முக்கியக் காரணம் என்று நினைத்திருந்தோம். ஆனால், அது சரியல்ல என்பதை இப்போது அறிந்திருக்கிறோம்” என்கிறார் க்ருட்மன்.

“இயற்கையான சூரிய ஒளியில் உள்ள மற்ற அலைநீளங்களும் சருமத்தின் முதுமைக்குப் பங்களிக்கக்கூடும். உதாரணமாக, கண்ணுக்குத் தெரியும் ஒளி மற்றும் அகச்சிவப்புக் கதிர்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். வெப்பநிலை அதிகரிப்பதும்கூட இந்தச் செயல்முறைக்குப் பங்களிக்கக்கூடும்” என்கிறார் அவர்.

இதற்கிடையில், வயதும் சரும முதுமைக்கு ஒரு முக்கியக் காரணமாகும். வயதாகும்போது, சருமத்துக்கு கட்டமைப்பையும் உறுதியையும் வழங்கும் கொலாஜன் என்ற புரதம் படிப்படியாகக் குறைகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படலாம்.



By admin