• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

சுரேஷ் பட்னாலா: அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாலுமி மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகள் என்ன?

Byadmin

Jun 13, 2026


பட்னாலா சுரேஷ், பார்கவி, வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், அமெரிக்கா
படக்குறிப்பு, பட்னாலா சுரேஷ் மற்றும் பார்கவி (கோப்பு படம்)

    • எழுதியவர், லக்காஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“நான் பாதுகாப்பாக வீடு திரும்புவேன். நம்முடைய திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்” – இதுதான் கப்பல் பொறியாளர் பட்னாலா சுரேஷ் தனது மனைவியிடம் கடைசியாகக் கூறிய வார்த்தைகள்.

புதன்கிழமை அன்று ஓமன் அருகே வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலில் சுரேஷ் உயிரிழந்தார்.

பட்னாலா சுரேஷின் மனைவி பார்கவியிடம் பிபிசி பேசியது. “அவர் தினமும் காலையில் குட்மார்னிங் என்று செய்தி அனுப்புவார். வீடியோ கால் பேச வாய்ப்பு கிடைக்காத நாட்களிலும், அவருடைய குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இப்போது அவர் உயிரோடு இல்லை என்ற செய்தி தான் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 44 வயதான சுரேஷ் பட்னாலா, ஓமன் அருகே ‘எம்டி செட்டபெல்லோ’ என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய மாலுமிகளில் ஒருவராவார்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து, விசாகப்பட்டினத்தின் ஸ்ரீஹரிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வீடே சோகமயமாகக் காட்சியளிக்கிறது.

By admin