• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

நீட் மறுதேர்வு நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்படும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Byadmin

Jun 13, 2026


மத்திய அமைச்சர் பிரஸ்மீட்:

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் நடைபெறும். உங்கள் அனைவர் வாயிலாகவும், நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் நம்பிக்கையுடன் இருந்து உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். மறுதேர்வு நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்படும்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (NTA), மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்க முடிவு செய்துள்ளது.

தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறும். இதன் மூலம் மொத்தம் 195 நிமிடங்கள் தேர்வுக்கான நேரம் கிடைக்கும். தேர்வுக்கான கால அளவு 15 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

By admin