• Wed. Jul 1st, 2026

24×7 Live News

Apdin News

சூர்யவன்ஷி பற்றி ஸ்ரேயாஸ் ஐயர் பேசிய கருத்தால் எழும் விவாதம் – ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

Byadmin

Jul 1, 2026


ஷ்ரேயாஸ் ஐயர், வைபவ் சூர்யவன்ஷி , டி20 தொடர், கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Ashley Allen/Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

செய்தியாளர்: “எங்குப் பார்த்தாலும் வைபவ் மற்றும் அவரைப் பற்றிய பேச்சுகளே முதன்மையாக இருக்கின்றன. பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு இந்தச் சூழல் மிகவும் கடினமானதாக இருக்கும் அல்லவா?”

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறிய கருத்துக்கள், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதுடன், தனது அணுகுமுறைக்காக ஐயர் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகி வருகிறார்.

அயர்லாந்திற்கு எதிராக சமீபத்தில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 0-2 என்ற கணக்கில் இழந்தது.

இந்த இரண்டு போட்டிகளிலுமே வைபவ் சூர்யவன்ஷி விளையாடவில்லை. இது குறித்து கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவுகள் குறித்துக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஜூலை 1-ஆம் தேதி புதன்கிழமையன்று விளையாடவுள்ளது.

By admin