• Wed. Jul 1st, 2026

24×7 Live News

Apdin News

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு – நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!

Byadmin

Jul 1, 2026


பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் நாளைமுதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நடைபெறவுள்ள ஜூலை – 2026 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் நாளை முதல் (ஜூலை.2) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில்,

விண்ணப்ப எண், அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

By admin