• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

செனகல் அருகே கடலில் படகு மூழ்கி 21 பேர் உயிரிழப்பு

Byadmin

Nov 9, 2026


செனகல் நாட்டின் தாக்கர் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ளது தான் கெபிமேர் நகரம்.

இந்த நகரின் டவுன் பகுதியில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று அதிகாலையில் ஒரு படகில் மேற்கு ஆப்பிரிக்கா வழியாக ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு செல்ல புறப்பட்டனர்.

அவர்கள் புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக கடலில் படகு கவிழ்ந்து மூழ்கியது. இதில் 21 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், ஒருவர் மீட்கப்பட்டு இருப்பதாகவும் செனகல் நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விவரம் இதுவரையில் தெரியவில்லை என்றும், மீட்பு பணியை கடற்படையினர் மேற்கொண்டு இருப்பதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது மிகவும் ஆபத்தான கடல் வழி என்றும், கடந்த 5 மாதங்களில் மட்டும் 635 பேர் இக்கடல் வழியாக பயணித்து படகு மூழ்கி உயிரிழந்து இருப்பதாகவும் செனகல் நாட்டு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin