• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

தீபாவளி: தமிழ்நாட்டில் எண்ணெய் குளியல், புத்தாடை, அசைவம் போன்ற வழக்கங்கள் தோன்றியது எப்படி? வரலாறு

Byadmin

Nov 9, 2026


எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம், தீபாவளி, பண்பாடு, வரலாறு

படக்குறிப்பு, கோப்புப் படம்

தீபாவளி பண்டிகை அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது, புதுத் துணி உடுத்துவது, இறை வழிபாட்டில் ஈடுபடுவது, பலகாரங்கள் செய்வது, அசைவ உணவுகள் சமைப்பது போன்றவை வழக்கங்களாகப் பின்பற்றப்படுகின்றன.

ஆனால், இந்த வழக்கங்கள் எப்போது தோன்றின? அவற்றின் வரலாறு மற்றும் பண்பாட்டு காரணங்கள் என்ன?

‘நீத்தார் சடங்குகளுடனான தொடர்பு’

“தீபாவளியன்று பின்பற்றப்படும் வழக்கங்கள் நீத்தார் சடங்குகளுடன் தொடர்புடையவை” எனக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர், தமிழ் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.

“நீத்தார் சடங்குகள் என்றால் தங்கள் குடும்பத்தின் முன்னோர்களை அவர்களது நினைவு தினத்தன்று வழிபடுவது. அவை அனைத்துமே தீபாவளியன்று பின்பற்றப்படும் சடங்குகளுடன் பொருந்திப் போகின்றன” என்கிறார் அவர்.

எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம், தீபாவளி, பண்பாடு, வரலாறு
படக்குறிப்பு, எழுத்தாளர், தமிழ் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது குறித்துப் பேசும் அவர், “எண்ணெய் என்பது நம்மிடம் அறிமுகமானதில் இருந்து வெறும் ஓர் உணவுப் பொருளாக மட்டுமே இருந்ததில்லை. அது வைத்தியத்தில் மிக முக்கியமான மூலிகையாகக் கருதப்பட்டிருக்கிறது. இன்றும்கூட உள்ளூர்களிலுள்ள சித்த வைத்தியர்கள் எண்ணெய் கொடுப்பதை மிக முக்கியமானதாக வைத்திருக்கிறார்கள். உடல் சூட்டைத் தணிப்பதற்காக எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வைத்திய மரபில் இருந்து வருகிறது” என்கிறார்.



By admin