• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

கோவை பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? பெருமாள் முருகன் பேட்டி – 10 கேள்வி பதில்கள்

Byadmin

Nov 9, 2026


பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கோவையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்களை கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு இணைய இதழில் பதிவிட்டார். அகல் விளக்கு என்ற பதிப்பகத்தின் சார்பில் பொய்யான எழுத்தாளர்களின் பெயர்களைக் கொண்டு, மேம்பாடு அடையாத செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள், அவசரமாக அச்சடிக்கப்பட்டு, வழக்கத்தை விட 5 மடங்கு அதிகவிலைக்கு விற்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பெருமாள் முருகன், தமிழகத்தில் நூலகங்களுக்கு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட ஓர் உறுப்பினர்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள வேளையில், அவரை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது. அவருடன் பிபிசி தமிழ் செய்தியாளர் சேவியர் செல்வக்குமார் நடத்திய கலந்துரையாடல் கேள்வி – பதில் வடிவில் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகத்திற்குள் தரமற்ற நூல்கள் வந்ததற்கு யார் பொறுப்பு? எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி 1: நூலகங்களுக்கு நூல்களைப் பரிந்துரை செய்யும் குழுவில் இடம் பெற்றவர் என்ற முறையில் புத்தகங்கள் கொள்முதலில் உள்ள அரசின் நடைமுறை, அதில் எவ்வாறு முறைகேடு நடந்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: திமுக ஆட்சியில் புத்தகங்கள் கொள்முதலில் ஒரு புதிய கொள்கையைக் கொண்டு வந்தனர். அப்போது இளம் ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத், அந்த துறை அதிகாரியாக இருந்தார். பதிப்பகத்தார் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், இணைய வழியாக பதிப்பகங்கள் நுால்களைச் சமர்ப்பிக்க போர்ட்டல் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த நுால்களை துறை சார்ந்த வல்லுநர்கள் பரிந்துரையைக் கேட்டு அதன் அடிப்படையில் அந்த புத்தகங்களை வாங்குவது அல்லது வேண்டாம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அது சிறப்பான நடைமுறை. கடந்த 2024–2025, 2025–2026 இரு நிதியாண்டிலும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது.



By admin