• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

குஜராத்: மாட்டுச்சாணத்தில் இருந்து பயோ-சிஎன்ஜி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? 2 ஆலைகளுக்கு அடிக்கல்

Byadmin

Nov 8, 2026


 பனாஸ் பால் பண்ணை

படக்குறிப்பு, டாமா கிராமத்தில் அமைந்துள்ள பனாஸ் பால் பண்ணையின் பயோ-சிஎன்ஜி ஆலையின் புகைப்படம்.

குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ராதன்பூர் தாலுகா மற்றும் வாவ்-தாராத் மாவட்டத்தில் உள்ள தாராத் தாலுகா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பனாஸ் டெய்ரியின் இரண்டு புதிய பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அடிக்கல் நாட்டினார்.

இதன் மூலம் பால் பண்ணையின் எரிபொருள் உற்பத்தித் திறன் கணிசமாக அதிகரிக்கும்.

பசு மற்றும் எருமைச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளான பயோ-சிஎன்ஜி மூலம் கார்கள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களை இயக்குவதன் மூலம், பனாஸ் டெய்ரி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன் பொருளாதார ரீதியாகவும் வருவாய் ஈட்டி வருகிறது.

அக்டோபர் 30ஆம் தேதி, ராதன்பூர் மற்றும் தாராத் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள பனாஸ் டெய்ரியின் இரண்டு புதிய பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

ராதன்பூரில் அமையவுள்ள ஆலையில் தினமும் 1,350 கிலோ பயோ-சிஎன்ஜி உற்பத்தி செய்ய முடியும். அதேவேளையில், தாராத் ஆலையில் தினமும் 1,800 கிலோ பயோ-சிஎன்ஜி உற்பத்தி செய்யும் திறன் இருக்கும்.



By admin