• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

காடி ஐசென்கோட்: இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க அழைக்கப்பட்டுள்ள இவர் யார்? முழு பின்னணி

Byadmin

Nov 8, 2026


 ஐசென்கோட்

படக்குறிப்பு, பிரதமர் நெதன்யாகுவின் போட்டியாளரான ஐசென்கோட்டிடம், ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை அதிபர் ஒப்படைத்துள்ளார்.

    • எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பை எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியான ஐசென்கோட், கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும்பாலான காலம் இஸ்ரேலை வழிநடத்திய பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு தற்போது எதிர்பாராத சவாலாக உருவெடுத்துள்ளார்.

ஐசென்கோட் அரசியலுக்குப் புதியவர். 2022ஆம் ஆண்டில்தான் அவர் முறையாக அரசியலில் நுழைந்தார்.

நேஷனல் யூனிட்டி கட்சி சார்பில் அவர் இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர், அக்கட்சியுடன் ஏற்பட்ட கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி அதிலிருந்து விலகினார்.

கடந்த ஆண்டு, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து பிரிந்து, ‘யஷார்’ என்ற தனது சொந்த மையவாதக் கட்சியைத் தொடங்கினார். ‘யஷார்’ என்றால் ‘நேர்மையான’ அல்லது ‘வெளிப்படையான’ என்று பொருள்.



By admin