• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

முதலமைச்சர் விஜய்க்காக மொட்டையடித்த தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா – மெக்காவில் பிரார்த்தனை

Byadmin

Nov 8, 2026


இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவிற்கு சென்றுள்ள தவெக எம்.எல்.ஏ. வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பதற்காக தான் வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள மெக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித தளமாக பார்க்கப்படுகிறது.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ. முஸ்தபா, தற்போது மெக்காவிற்கு சென்ற காணொளியை வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த காணொளியில், தனது தலையை மொட்டையடித்து கொண்டு, வெள்ளை நிற உடையுடன் மெக்காவில் பிரார்த்தனை செய்வது பதிவாகியுள்ளது.

இந்த பயணம் குறித்து எம்.எல்.ஏ. முஸ்தபா கூறுகையில், “இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.

தமிழ்நாட்டில் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிற, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் சிறந்த ஆட்சியை நடத்த நான் பிரார்த்திக்கின்றேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களுக்கு பல நலத்திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்.

அவர் இன்னும் அதிக ஆண்டுகள், இந்த சாதனையை புரிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஏழை மக்களுக்கு, சாமானிய மக்களுக்கு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று ஆட்சி நடத்தி கொண்டிருக்கின்ற எங்கள் முதலமைச்சருக்கு, ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் மக்களுக்கு செய்யக்கூடிய ஆற்றலையும் தரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin