ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்
இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.
அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.