• Fri. Jul 31st, 2026

24×7 Live News

Apdin News

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

Byadmin

Jul 31, 2026


ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான  F42 வகை  மாற்றுத்திறனாளிகள்  தட்டெறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.

அப் போட்டியில்   பாலித்த பண்டார  தனது முதலாவது முயற்சியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்ததன் மூலம் 992 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

இதன் மூலம் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்கொடுத்தவர் என்ற பெருமைமை பாலித்த பண்டார பெற்றுக்கொண்டார்.

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் அவர் வென்றெடுத்த இரண்டாவது தொடர்ச்சியான பதக்கம் இதுவாகும்.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவிலும்   பாலித்த பண்டார  வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

By admin