• Fri. Jul 31st, 2026

24×7 Live News

Apdin News

இலங்கைக்கும் உலகின் பழமையான கிராம்புக்கும் என்ன தொடர்பு? மாந்தை துறைமுகத்தின் வரலாற்று சான்றுகள்

Byadmin

Jul 31, 2026


இலங்கைக்கும் உலகின் பழமையான கிராம்புக்கும் என்ன தொடர்பு? மாந்தை துறைமுகத்தின் வரலாற்று சான்றுகள்

பட மூலாதாரம், Getty Images

சமையலிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் நறுமணப் பொருளான கிராம்பு பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் இந்தோனீசியா மிகப்பெரிய கிராம்பு உற்பத்தியாளராக உள்ளது. அதேவேளையில், இந்தியா உலகின் முக்கிய கிராம்பு இறக்குமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது

ஆனால், நவீன வர்த்தக உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு மாதிரி எங்கு கண்டெடுக்கப்பட்டது தெரியுமா?

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டைய ‘மாந்தை’ (பண்டைய காலத்தில் ‘மகாதீத்த’) துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில், அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை, கிராம்பு, மாந்தை துறைமுகம்

பட மூலாதாரம், Cambridge University Press

கி.பி. 900 முதல் 1100 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த இந்தக் கிராம்பு மற்றும் கி.பி. 600-700 காலப்பகுதியைச் சேர்ந்த கருமிளகு மாதிரிகள், ஆசிய கண்டத்தின் பண்டைய நறுமணப் பொருட்கள் வர்த்தக வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

அறிவியல்பூர்வ சான்றுகள் மற்றும் அகழ்வாராய்ச்சி

இலங்கையின் தொல்பொருள் துறை மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு ஆய்விலேயே இந்த அரிய சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

By admin