• Fri. Jul 31st, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?

Byadmin

Jul 31, 2026


சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். (கோப்புப்படம்)

“எழும்பூரில் போராட்டம் (ஜூலை 22) நடத்த சென்ற என்னைக் காவலர்கள் தூக்கி வீசினர். இதனால் வலதுகால் மூட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. ரத்தம் உறைந்துள்ளதால் ஒருவாரம் கழித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்”

இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் அமர்நீதி பிபிசி தமிழிடம் இவ்வாறு கூறினார். தன்னைப் போல ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

‘போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும்” என்கிறார், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா.

‘மாணவர்கள் மீது காவல்துறையின் அச்சுறுத்தல் இருக்காது’ எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ள நிலையில், அரசின் மீதான விமர்சனம் தொடர்வது ஏன்?

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Handout

நீட் தேர்வுவினாத்தாள் கசிவு குறித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

By admin