• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

சென்னை: புது வீடு கட்டித் தருவதாக தமிழக அரசு கூறியும் பழைய குடியிருப்பை காலி செய்ய இவர்கள் மறுப்பது ஏன்?

Byadmin

Nov 4, 2026


ஹெல்மெட் அணிந்தபடி சமையல் வேலைகளை பார்க்கும் ஆதிலட்சுமி.
படக்குறிப்பு, ஹெல்மெட் அணிந்தபடி சமையல் வேலைகளை பார்க்கும் ஆதிலட்சுமி.

“அன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் ஒன்பதரை மணியளவில் என் சகோதரரின் நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். முதல் மாடியில் அவர் ஏறும்போது மொத்த படிக்கட்டுகளும் பெயர்ந்து விழுந்துவிட்டன.”

சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் வர்ஜின் குடும்பத்தில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடந்த சம்பவம் இது.

இந்தச் சம்பவத்தில் இளைஞருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் இருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய வர்ஜின் தெரிவித்தார்.

இதேபோன்ற நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. புதிய வீடுகளைக் கட்டித் தருவதாக கூறி, இந்த வீடுகளை காலி செய்யுமாறு அரசு கூறினாலும், அதனை ஏற்பதற்கு அங்கு வசிக்கும் மக்கள் மறுத்து வருகின்றனர். இதற்கான காரணங்களை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

சென்னைப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் (தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) 1970 களில் 1,356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.



By admin