• Wed. Nov 4th, 2026

24×7 Live News

Apdin News

நியூசிலாந்து மோதல்: முதல் ஒருநாள் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? India vs New Zealand Clash: Who will win the first ODI?

Byadmin

Nov 4, 2026


பரபரப்பான டி20 தொடருக்கு பிறகு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போது ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் இன்று (நவ.4) நடைபெறுகிறது.

டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும்.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார்; கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார்.

ரோ-கோ என்ட்ரி:

வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், ஒருநாள் தொடர் முடிந்ததும் சுப்மன் கில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க உள்ளார்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது, அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.

By admin