• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

சென்னை மாணவர் கொலை: சிறார்கள் உட்பட 16 பேர் கைது – என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு

Byadmin

Aug 19, 2026


சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் நடந்தது என்ன?
படக்குறிப்பு, தனுஷ்குமார்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சென்னையில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் இளஞ்சிறார்கள் என்பதால் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியதைத் தட்டிக் கேட்டதால் தன் மகன் கொல்லப்பட்டதாக, இறந்த மாணவரின் தந்தை வெங்கடேசன் கூறுகிறார்.

“ஆனால், மாணவரின் இறப்புக்கு போதைப் பயன்பாடு காரணமாக இல்லை” என, திருவொற்றியூர் உதவி ஆணையர் (பொறுப்பு) பிரம்மானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பள்ளி வளாகங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

By admin