• Tue. Aug 25th, 2026

24×7 Live News

Apdin News

செல்போன், சிம் கார்டை விட்டு ரயிலேறி உத்தரபிரதேசம் சென்றவரை 5 மாநிலங்களில் தேடி கண்டுபிடித்தது எப்படி?

Byadmin

Aug 25, 2026


குற்றம்சாட்டப்பட்ட சாதிக் கான்

பட மூலாதாரம், UGC/ x.com/ Kakinada District Police

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட சாதிக் கான்(இடது), காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ்

    • எழுதியவர், கரிகிபாட்டி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆந்திராவை உலுக்கிய பித்தாபுரம் பஞ்சாயத்து ராஜ் உதவி பொறியாளர் நூகராஜு குடும்பத்தின் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷேக் சாதிக் கானை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளதாக காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 24, திங்கள்கிழமை காக்கிநாடாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், உதவி பொறியாளர் நூகராஜு எழுதிய மரண வாக்குமூலம், அவரது மகள் சௌஜன்யா எழுதிய கடிதம் மற்றும் சௌஜன்யாவின் உறவினர் பாஸ்கர் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சாதிக் கைது செய்யப்பட்டதாக விளக்கினார்.

சௌஜன்யாவின் கணவர் ஜகதீஷ் ரெட்டியின் மரணத்திற்கான காரணங்கள், மதம் மாறும்படி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழுத்தம், மிரட்டல் மூலம் கட்டுப்படுத்தல் (பிளாக்மெயில்), உயிரிழந்தவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுத்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இன்னும் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

உண்மையில் என்ன நடந்தது?

கிழக்கு கோதாவரி மாவட்டம் பித்தாபுரம் பஞ்சாயத்து ராஜில் உதவி பொறியாளராக பணியாற்றிய கொல்லிபூடி நூகராஜு, அவரது மனைவி மீனா, மகள் சௌஜன்யா மற்றும் பேரன் ரியாஞ்ஷ் கார்த்திகேய ரெட்டி ஆகியோர் ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ராஜமகேந்திரவரம் சாலை-இரயில் பாலம் அருகே தற்கொலைக்கு முயன்றனர்.

(தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், இந்திய அரசின் ‘ஜீவன் சாத்தி’ உதவி எண்ணான 18002333330-ஐ தொடர்புகொள்ளலாம்.

By admin