• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

செல்வப்பெருந்தகை வருமான வரித்துறையால் தடுக்கப்பட்டாரா? சர்ச்சையும் விளக்கமும் என்ன?

Byadmin

Apr 25, 2026


புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை

பட மூலாதாரம், TNCC/X

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தனது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறி புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.

முன்னதாக, ராகுல்காந்தியின் தமிழ்நாடு வருகையின்போது சோதனை என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தன்னை சட்டவிரோதமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சிறை வைத்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட வருமான வரித்துறை, ‘செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை’ என விளக்கம் அளித்திருந்தது.

சட்டமன்றத் தேர்தலில் பரப்புரை செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதியன்று தமிழ்நாடு வந்திருந்தார்.

ராகுல்காந்தியின் பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை.

By admin