ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் சுமார் ரூ.1,810 கோடி வசூலுடன் இத்தனை ஆண்டுகளாக அதிக வசூல் செய்த இந்திய படங்களில் 2 ஆம் இடத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 19 அன்று வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,812 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி, அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதிக வசூல் ஈட்டிய இந்திய படங்களில் அமீர் கானின் தங்கல் ரூ.2,000 கோடியுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. ரூ.1,812 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்தை துரந்தர் 2 பிடித்த நிலையில் பாகுபலி 2 மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ரூ.1,742 கோடி வசூலுடன் நான்காம் இடத்திலும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் ரூ.1,300 கோடி வசூலுடன் 5 ஆம் இடத்திலும் நீடித்து வருகிறது.
துரந்தர் 2 திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், வரும் நாட்களில் அதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ‘தங்கல்’ படத்தின் சாதனையை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.