• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

செளகார் ஜானகி: 94 வயதான பழம்பெரும் நடிகை இன்று காலமானார்

Byadmin

Aug 21, 2026


பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 94 வயதில் இன்று காலமானார்

பட மூலாதாரம், GODL

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது))

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) காலமானார்.

அவரது உடலுக்கு நாளை காலை முதல் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது என்றும் நாளை மறுநாள் சென்னையில் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செளகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு மொழியில் அவர் நடித்த செளகார் என்ற படத்தின் மூலம் ஜானகி தனது பெயருக்கு முன்பாக செளகார் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்.

By admin