• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

செளதி அரேபியா மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் உடல்களை குடும்பத்திடம் ஒப்படைப்பதில்லை ஏன்?

Byadmin

Sep 16, 2026


கிப்ரோம் கின்ஃபே அரேகாவி, இந்த ஆண்டு ஜூன் மாதம் சௌதி அரேபியாவில் கஞ்சா கடத்தியதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து எத்தியோப்பியர்களில்  ஒருவர்.

பட மூலாதாரம், Handout/BBC

படக்குறிப்பு, கிப்ரோம் கின்ஃபே அரேகாவி மற்றும் சிகாபு கெப்ரெமரியம் (வலது) ஆகியோர் ஜூன் 23 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து எத்தியோப்பியர்களில் அடங்குவர். அவர்களின் உடல்கள் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    • எழுதியவர், ஹனா ஜெராட்சியோன்
    • பதவி, பிபிசி

    • எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

“குடும்பத்தினர் ஆறுதல் அடைந்து, அவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தச் சடங்குகள் அனைத்தையும் செய்தோம். ஆனால், எனக்கு அந்த ஆறுதல் கிடைக்காது” என்கிறார் தனது மகன் கிப்ரோமை இழந்து தவிக்கும் தந்தை கின்ஃபே அரேகாவி.

“இது என் வாழ்நாள் முழுவதும் எனக்கு வருத்தத்தையும் துக்கத்தையும் தரப்போகிறது”என அவர் கூறுகிறார்.

கிப்ரோம் கின்ஃபே அரேகாவி, இந்த ஆண்டு ஜூன் மாதம் சௌதி அரேபியாவில் கஞ்சா கடத்தியதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து எத்தியோப்பியர்களில் ஒருவர்.

உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலில் சீனா மற்றும் இரானுக்கு அடுத்தபடியாக சௌதி அரேபியா தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

பல எத்தியோப்பிய கிறிஸ்தவர்களுக்கு, முறைப்படியான மதரீதியான சடங்கு என்பது நம்பிக்கையின் ஓர் இன்றியமையாத அங்கமாகும். இதில் சடங்கு முறையில் பயன்படுத்தப்படும் துணியால் உடல் சுற்றப்பட்டு, மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்படும்.

By admin