• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

சொத்துப் பிரச்னையில் தந்தையை கொன்றதாக மகனும் தாயும் கைது – தகன மேடையில் தடுத்து போலீஸ் கைது செய்தது எப்படி?

Byadmin

Sep 16, 2026


குற்றம், கொலை, காவல்துறை, வாலாஜாபாத்
படக்குறிப்பு, மதுசூதனன் (மகன்) – ரேணுகா (தாய்)

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘தந்தையைக் கொன்றுவிட்டு, மாரடைப்பு’ எனக் கூறி நாடகம் ஆடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில், மகன் மற்றும் தாயை செப்டம்பர் 15ஆம் தேதி கைது செய்துள்ளதாக வாலாஜாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

“நாங்கள் சென்றபோது உடலைத் தகன மேடைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. சிறிது தாமதித்து இருந்தாலும் தகனம் செய்திருப்பார்கள்” என்கிறார் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன்.

இந்த வழக்கில் மகன் மற்றும் தாய் மீது கொலை, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே வாலாஜாபாத் ஒன்றியத்தில் மருதம் கிராமம் அமைந்துள்ளது. விவசாயம் பிரதானமாக உள்ள இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான சிவபாதம், அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநராக இருந்த ஓய்வு பெற்றுவிட்டார்.

இவரது மனைவி ரேணுகா. இந்தத் தம்பதியின் ஒரே மகனான மதுசூதனன், கப்பல் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

By admin