• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

சோல்பாக்கன்: கால்பந்து வீரராக இருந்தபோது 7 நிமிடம் ‘இறந்தவர்’; நார்வே அணியை வெற்றிப் பாதையில் நடத்துவது எப்படி?

Byadmin

Jul 8, 2026


ஸ்டால் சோல்பக்கன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டால் சோல்பக்கன் நார்வே கால்பந்து அணியின் பயிற்சியாளர்.

    • எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“என் தாய் எனது இறுதிச் சடங்கிற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.”

இன்னும் உயிரோடு இருக்கக்கூடிய,சமீபத்தில் சரித்திரம் படைத்த ஸ்டால் சோல்பக்கனின் வார்த்தைகள் இவை.

58 வயதான சோல்பாக்கன், நார்வே தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில், அவரது அணி ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசிலை ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தில் வீழ்த்தி, மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

போட்டி முடிந்த பிறகு, சோல்பாக்கன் தனது குடும்பத்தினரைக் கட்டிப்பிடித்தார். அதற்கான காரணம் மிகவும் விசேஷமானது.

By admin