• Thu. Nov 12th, 2026

24×7 Live News

Apdin News

சௌதியில் சிவராசா அனோஜன் வழக்கில் நடந்தது என்ன? மரண தண்டனை முதல் முழுமையான விடுதலை வரை

Byadmin

Nov 11, 2026


சௌதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல்

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக முகமது நபி குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான சிவராசா அனோஜன், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், ஏனைய தண்டனைகளிலிருந்து அவர் கடந்த 9ம் தேதி விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்து செல்வதில்லை என சௌதி அரேபியா அரச வழக்கறிஞர் அலுவலகம் கடந்த 9ம் தேதி தீர்மானித்திருந்ததாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையிலேயே, சிவராசா அனோஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.



By admin