• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

சௌதி டூ பாகிஸ்தான்: தம்பி இறுதிச்சடங்கில் பங்கேற்ற அண்ணனே கொலையாளி என கைது – என்ன நடந்தது?

Byadmin

Oct 27, 2026


அண்ணனும் தம்பியும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சி

அக்டோபர் 17-ஆம் தேதி பிற்பகல் சுமார் 1.30 மணியளவில், பாகிஸ்தானின் குஜராத்தில் உள்ள ரூபேரி கிராமத்தில் வசித்த இளைஞர் முகமது சுஃபியானை, செளதி அரேபியாவில் வசித்து வந்த அவரது அண்ணன் முகமது பிலால் வாட்ஸ்அப் மூலம் அழைத்தார்.

அந்த அழைப்பில் பிலால், “நீ உடனடியாக குஜராத் நகரத்துக்கு வா. அங்கே உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஒரு முக்கியமான நபரை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இதையடுத்து சுஃபியான் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டார். குஜராத் நகரில் குறிப்பிட்ட இடத்தை அடைந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, அவருக்கு ஆச்சரியம் அளிக்க வந்தவர் வேறு யாருமல்ல, அவருடைய சொந்த அண்ணன்தான் என்பது தெரியவந்தது.

இருவரும் ஒன்றாக உணவருந்தி, பேசிக்கொண்டிருந்தனர். மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பப் புறப்பட்டனர்.

குஜராத் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஃபைசல் ஷெஹ்சாத், டரேக்ரி சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தை அடைந்தபோது, இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்று கூறி மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பிலால் தனது தம்பியிடம் கேட்டதாக கூறுகிறார்.



By admin