• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளால் நிரம்பிய இந்த மாளிகை ‘திகிலூட்டும் வீடு’ ஆனது எப்படி?

Byadmin

Oct 27, 2026


 சில்வியா ஜாங் (இடது) மற்றும் குவோஜுன் சுவான்

படக்குறிப்பு, குழந்தைகளைத் துன்புறுத்தச் சதி செய்ததாக சில்வியா ஜாங் (இடது) மற்றும் குவோஜுன் சுவான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • எழுதியவர், மெங்சென் ஜாங்
    • பதவி, பிபிசி உலக சேவையின் உலகளாவிய சீனப் பிரிவு
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

2025 ஆம் ஆண்டு மே மாதம், கலிபோர்னியாவின் வசதி படைத்த ஆர்கேடியா புறநகர்ப் பகுதியில், வால்டர் என்ற இரண்டு மாதக் குழந்தை தலையில் காயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

காவல்துறை அறிக்கையின்படி, குழந்தையின் தாய் என்று கூறிக்கொண்ட ஒரு பெண், படுக்கையிலிருந்து தவறுதலாகக் குழந்தை கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், மருத்துவருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

வால்டரின் உடல்நிலை, கார் விபத்தில் சிக்கியவர்கள் அல்லது உலுக்கப்பட்டதால் காயமடைந்தவர்களின் நிலையைப் போல இருப்பதாக அவர் கூறினார்.

குழந்தை துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினர் வால்டர் வசித்து வந்த பிரமாண்டமான மாளிகையில் சோதனை நடத்தினர்.



By admin