• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

வடமத்திய மாகாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம்

Byadmin

Oct 27, 2026


வடமத்திய மாகாணம் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலை காரணமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று  (26) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி, வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்,

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தங்கியிருக்கவும். மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும்.

இடி முழக்கத்தின்போது ஜன்னல்கள், தொலைக்காட்சி தொகுப்பான்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

இடி முழக்கத்தின்போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்புகளுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

கைக்கிள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

By admin