• Tue. Aug 11th, 2026

24×7 Live News

Apdin News

சௌதி, பாகிஸ்தான், துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அரபு ஊடகங்கள் என்ன கூறுகின்றன?

Byadmin

Aug 11, 2026


ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் துருக்கிய அதிபர் எர்துவான், சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

பட மூலாதாரம், TUR Presidency /Murat Cetinmuhurdar/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் துருக்கிய அதிபர் எர்துவான், சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையைச் சுற்றி அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி அரபு ஊடகங்கள் மாறுபட்ட விதங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் ஆகஸ்ட் 7 அன்று உச்சிமாநாடு ஒன்றை நடத்தி “மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி சௌதி மற்றும் கத்தாரின் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களான அல் அரேபியா மற்றும் அல் ஜசீரா விரிவாக நேரலையில் செய்தி வழங்கிய நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊடகங்கள் இதற்கு குறைவான முக்கியத்துவமே அளித்துள்ளன.

பாப் அல்-மண்டேப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் கடல் வர்த்தக வழித்தடங்களைப் பாதுகாக்கும் நோக்கில் சௌதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு கடல்சார் பாதுகாப்புக் கூட்டணியை அமைப்பதை பாகிஸ்தான் ஆதரித்துப் பேசியதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சொல்லும் செய்தி என்ன?

அல் ஜசீராவிடம் பேசிய சௌதி அரசியல் ஆய்வாளர் காலித் பாதெர்ஃபி, இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு நோக்கத்தைக் கொண்டது என்றும், குறிப்பாக இரான் அல்லது இஸ்ரேலிலிருந்து ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு பதிலளிக்கும் வகையில் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

By admin