• Tue. Oct 13th, 2026

24×7 Live News

Apdin News

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு

Byadmin

Oct 13, 2026


ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டார் எல்லை கட்டுப்பாடு கோடு வழியாக 4 பயங்கரவாதிகள் நேற்று இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர்.

கண்ணிவெடி

ஆனால் இருநாட்டு எல்லையில் பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே பல பகுதிகளில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர்.

4 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் இருந்து கிருஷ்ணா கட் செக்டார் வழியாக காஷ்மீருக்குள் நுழைய முயன்றபோது பாதுகாப்புப் படையினர் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் பயங்கரவாதிகள் மிதித்துள்ளனர்.

நால்வர் பலி

கண்ணிவெடி வெடித்து சிதறியதில் 4 பயங்கரவாதிகளும் உடல் சிதரி உயிரிழந்தனர்.

உயிரிழந்த பயங்கரவாதிகள் நால்வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த முகமது இஸ்திக், முகமது பைசன், முகமது வாகஸ், முகமது ஆசிப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் முகமது பைசன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத முக்கிய தளபதிகளுள் ஒருவன் ஆவான். ஏனைய மூவரும் அதே அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்

ஊடுருவல் முறியடிப்பு

நால்வரும் உயிரிழந்ததன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணிவெடி வெடித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

By admin