• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

ஜம்மு காஷ்மீர் குறித்து ஓ.சி.ஐ கூட்டமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்த இந்தியா

Byadmin

Oct 20, 2026


ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி. நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

தீர்மானம்

அண்மையில் ஈராக் தலைநகர் பாக்தாதில் நடைபெற்ற ஓ.ஐ.சி. அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ‘ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிராகரிப்பு

இந்நிலையில் இந்த தீர்மானத்தை நிராகரித்து வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஓ.ஐ.சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒருதலைப்பட்சமானவை. உண்மைக்கு புறம்பானவை. இவை அனைத்தும் பாகிஸ்தானால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.

தன் குறுகிய மற்றும் பாரபட்சமான நோக்கங்களுக்காக, ஓ.ஐ.சி. அமைப்பை பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த அனுமதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.” என சாட்டியுள்ளது.

இந்த தீர்மானங்களை இந்தியா நிராகரிக்கிறது. இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க ஓ.ஐ.சி.க்கு எந்த உரிமையும் இல்லை.

By admin