• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

மெக்காவில் உள்ள மசூதியில் ‘தகாத செயலில்’ ஈடுபட்டதாகக் கூறி தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: செளதி அரேபியாவிடம் விளக்கம் கேட்ட வங்கதேசம்

Byadmin

Oct 20, 2026


செளதி அரேபிய ஊடகங்களின் தகவலின்படி, ‘தகாத’ செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

படக்குறிப்பு, செளதி அரேபிய ஊடகங்களின் தகவலின்படி, ‘தகாத’ செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மெக்காவில் உள்ள ஒரு மசூதியில் ‘தகாத’ செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு செளதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.

ஆனால், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கோ தூதரகத்துக்கோ தகவல் தெரிவிக்காமல் இருந்ததன் மூலம் செளதி அரேபியா வியன்னா உடன்படிக்கையை மீறியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் வங்கதேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை செளதி அரேபியாவுக்கு உள்ளதா? வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் எவ்வாறு வங்கதேசத்துக்குக் கொண்டு வரப்படும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் தூதரக வட்டாரங்கள், அந்த இருவரும் காவலில் வைக்கப்பட்டது, வழக்கு விசாரணை நடைபெற்றது, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஆகியவை குறித்து செளதி அதிகாரிகள் தூதரகத்துக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

எனினும், வங்கதேசம் கேட்டுள்ள விளக்கத்தை அளிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை செளதி அரேபியாவுக்கு உள்ளதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

By admin