• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

‘நெற்றியில் முத்தம்’, ‘பார்ட்டிக்குப் பிந்தைய கொண்டாட்டம்’ என சலுகைகள்: வாடகைக்கு கர்பா நடன பார்ட்னரை தேடுவதன் பின்னணி

Byadmin

Oct 20, 2026


சமூக ஊடகங்களில் கர்பா நடனக் கூட்டாளியைத் தேடும் பதிவுகள்

படக்குறிப்பு, ‘வாடகைக்கு கர்பா நடன துணை’ எனும் பெயரில் சமூக ஊடகத்தில் ஒரு பதிவு வைரலானது. உண்மையில் இவ்வாறு கர்பா நடனக் கூட்டாளிகள் வாடகைக்கு அமர்த்தப்படுகிறார்களா என்பதைக் கண்டறிய பிபிசி ஆய்வு நடத்தியது. (சித்தரிப்புப் படம்)

    • எழுதியவர், ஷியாம் பக்ஷி
    • பதவி, பிபிசி நியூஸ் குஜராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

நவராத்திரிக்கு சுமார் 25 நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் தொடங்கிய ‘கர்பா துணையை (partner) வாடகைக்கு எடுங்கள்’ என்ற டிரெண்ட் பெரும் விவாதப் பொருளானது. இதில் அதிக விலையுள்ள திட்டத்தில் நெற்றியில் முத்தமிடுவது, ‘விருந்துக்குப் பிந்தைய கொண்டாட்டத்தில்’ பங்கேற்பது போன்ற சலுகைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த டிரெண்ட் உங்கள் சமூக ஊடகப் பக்கத்திலும் தோன்றியிருக்கலாம்..

கடந்த சில நாட்களாக, நவராத்திரியின்போது கர்பா நடனம் ஆடுவதற்காக ‘துணைகளை’ வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்புகள் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் வெவ்வேறு கணக்குகள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தப் பதிவுகளில் ‘கோல்டு’, ‘சில்வர்’, ‘பிளாட்டினம்’ எனப் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு திட்டத்துக்கும் ஏற்ப வெவ்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிக விலையுள்ள திட்டத்தில் ‘நெற்றியில் முத்தம்’, ‘விருந்துக்குப் பிந்தைய கொண்டாட்டம்’ போன்ற சலுகைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்தக் கணக்குகள் உண்மையிலேயே ‘கர்பா நடன துணைகளை வாடகைக்கு வழங்குகின்றனவா என்பதைக் கண்டறிய, பிபிசி குஜராத்தி செய்தியாளர் இதுபோன்ற சில சமூக ஊடகக் கணக்குகளுக்கு மெசேஜ் செய்தி அனுப்பினார்.

By admin