• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

மனிதர்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிக்கும் கேமராக்கள் – புதிய தொழில்நுட்பங்களும் நிபுணர்கள் எழுப்பும் கவலைகளும்

Byadmin

Oct 20, 2026


கண்காணிப்பு கேமரா

படக்குறிப்பு, கண்காணிப்பு கேமரா (கோப்புப் படம்)

    • எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு இடையிலான வணிகப் பரிமாற்றத்தில் உங்கள் பகுதியின் கண்காணிப்பு உள்கட்டமைப்பின் பரப்பளவை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். அதைத் தெரிந்துகொள்ள இப்போது எளிய வழிகள் உள்ளன.

கண்காணிப்புத் தொழில்நுட்ப மேற்பார்வைத் திட்டத்தின் (Surveillance Technology Oversight Project) நிர்வாக இயக்குநரான மிஷெல் டாலை நான் சந்திக்கப்போவது பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.

ஆனால், நியூயார்க்கின் புரூக்ளினில் நான் அவரைச் சந்தித்து வாழ்த்துவதற்குள், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்பதை அந்த அமைப்பு அறிந்துகொண்டது.

“நீங்கள் கூர்ந்து கவனிக்காவிட்டால், இது உங்கள் கண்ணுக்குத் தெரியாது” என்று ஒரு விளக்குக் கம்பத்தை நோக்கிக் கை காட்டுகிறார் டால். அங்குள்ள கருப்பு பிளாஸ்டிக் டூம்களுக்குள் நியூயார்க் நகரக் காவல் துறை (NYPD) என்ற லேபிளுடன் இரு சிறு கேமராக்கள் மறைந்துள்ளன.

அவை நியூயார்க் நகரக் காவல் துறையின் பிரமாண்டமான ஏஐ கண்காணிப்பு தளமான ‘டொமைன் அவேர்னஸ் சிஸ்டத்தின்’ (Domain Awareness System – DAS) ஒரு பகுதி.

By admin