9
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகருமான மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கே. பி. ரோஹித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சம்பராலா ஏடி கட்டு- SYG’ திரைப்படத்தில் சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, தனஞ்செயா, ஜெகபதி பாபு, நரேஷ், சாய்குமார், ஸ்ரீகாந்த் ,அனன்யா, ரவி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஸ் லோகநாத் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி – சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு 2027 ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ்- தெலுங்கு- இந்தி – ஆகிய இந்திய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு 160 நாட்கள் நடைபெற்றிருக்கிறது. ரசிகர்களுக்கு ‘சம்பராலா ஏடி கட்டு’ புது வகையான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என படக் குழுவினர் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.