எக்ஸ் தள பதிவு:
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் ஆர்ப்பாட்டங்களை சுரண்டும் குற்றவாளிகளிடம் இருந்து சட்ட அமலாக்க படைகள் வன்முறையை எதிர்கொண்டு வருவதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
“மீண்டும் ஒருமுறை, ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக கூட, மோதலை தூண்டுவதற்கும் குழப்பத்தை விதைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களை பயன்படுத்திக்கொள்ளும் குற்றவாளிகளின் வன்முறையை சட்ட அமலாக்க படையின் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அவர்கள் அனைவருக்கும் எனது முழுமையான ஆதரவையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில், குடிமக்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் தங்கள் நகரத்தை குண்டர் கும்பல்கள் பாழாக்குவதையும் தீக்கிரையாக்குவதையும் காணாமல் அச்சமின்றி வாழ உரிமையுள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பை காப்பதற்காக அவர்கள் அங்கு இருந்தனர். நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம்,” என்று மெலோனி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.