பான் இந்திய நட்சத்திரமான ராம் சரண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பெத்தி’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு, பொமன் இரானி, விஜி சந்திரசேகர் , ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர் .ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
துடுப்பாட்டத்தின் பின்னணியில் எக்சன் என்டர்டெய்ன்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் மற்றும் ஐ வி வை என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ்- ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு, பலமுறை வெவ்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ்- தெலுங்கு- மலையாளம் -கன்னடம்- இந்தி – ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதனிடையே இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின் ‘ பெத்தி’ appeared first on Vanakkam London.