• Sat. May 2nd, 2026

24×7 Live News

Apdin News

டிஜிட்டல் மோசடிகளில் ரூ.23,718 கோடியை இழந்த இந்திய மக்கள் – ரிசர்வ் வங்கி என்ன செய்யப் போகிறது?

Byadmin

May 2, 2026


இந்தியாவில் அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடிகள் - ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி மாதத்தில், புனே நகரில் வணிகப் பகுப்பாய்வாளராகப் பணிபுரியும் அலோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, அவரது செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அவர் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், அவர் அந்த அபராதத்தை விரைவாகச் செலுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் அவரது ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்படக் கூடும் எனவும் அந்தக் குறுஞ்செய்தி எச்சரித்திருந்தது.

இதனால் கவலையடைந்த அலோக், அபராதத்தைச் செலுத்துவதற்காக அதில் கொடுக்கப்பட்டிருந்த இணைய முகவரியை உடனடியாக கிளிக் செய்தார். பணம் செலுத்தும் செயல்முறையை நிறைவு செய்யும்போது, அவரிடம் ஒரு ஓடிபி கேட்கப்பட்டது, அவர் அதையும் பகிர்ந்துகொண்டார்.

சில நிமிடங்களிலேயே, அவரது கடன் அட்டையில் (கிரெடிட் கார்டு) இருந்து ஒரு பெரிய தொகை எடுக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக, அவரது அட்டையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வரம்பான சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பிடிக்கப்பட்டது.

தனக்கே தெரியாமல், அலோக் தான் செலுத்த நினைத்த தொகையைவிட மிக அதிகமான ஒரு பணப் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். இந்தியாவில் பரவலாக நடக்கும் ஒரு டிஜிட்டல் மோசடிக்கு அவர் பலியாகியிருந்தார்.

By admin