• Mon. Jul 27th, 2026

24×7 Live News

Apdin News

ஜென் ஸி போராட்டம் இந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?

Byadmin

Jul 27, 2026


ஜென் ஸி போராட்டம் இந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜென் ஸி தலைமுறையின் போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். (படம்: ஜூலை 25)

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தெற்காசியாவில் கடந்த சில ஆண்டுகளில் பரவலாக எதிரொலித்த ஒரு சொல் என்றால், அது ஜென் ஸி (Gen Z) என்பதுதான்.

இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்திய தலைமுறை ‘ஜென் ஸி’ ஆகும்.

கடந்த இரண்டு மாதங்களாக, இந்திய அரசியலிலும் இதுவொரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் ஜென் ஸி இளைஞர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமையில் தொடங்கிய இந்த இயக்கம், ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியது. காக்ரோச் ஜனதா கட்சி இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியதால், ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் இதிலிருந்து விலகியே இருந்தன.

ஆனால் கடந்த ஒரு வாரத்தில், இந்த இயக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததால், பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது சர்வதேச ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

By admin