• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

டாடா சன்ஸ் குழுமத்தில் என்ன நடக்கிறது? சந்திரசேகரன் – நோயல் டாடா சர்ச்சையின் முழு பின்னணி

Byadmin

Sep 19, 2026


டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் நிலவிவரும் மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. டாடா சன்ஸ் குழுமத் தலைவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க இயக்குநர்கள் வாக்களித்தபோது, வியாழக்கிழமை இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது.

இதற்கிடையில், அக்குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரர் இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்த வாரியக் கூட்டத்தில், டாடா சன்ஸின் பங்குச்சந்தை பட்டியலிடலுக்கான தயாரிப்புகளுக்கு இயக்குநர்கள் ஒப்புதல் அளித்தனர். இந்த முடிவையும் நோயல் டாடா எதிர்த்தார்.

டாடா டிரஸ்ட்ஸின் தலைவராக நோயல் டாடா உள்ளார். டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில், டாடா டிரஸ்ட்ஸ் சுமார் 66 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. டாடா குழுமத்தின் 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், என். சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வாரியம் முடிவு செய்துள்ள இக்கூட்டத்திற்கு எதிராகச் சட்டப் போராட்டம் வெடிக்கக்கூடும்.

சந்திரசேகரன் தனது திட்டங்களை வியத்தகு முறையில் மாற்றினார்

By admin