கடைசி கொண்டாட்டம்
தற்கொலைக்கு முன்பாகத் தனது மகள் ஹிமான்ஷிக்கு பிறந்தநாள் போல அந்த அறையைப் பலூன்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் கிஷோர் அலங்கரித்துள்ளார்.
மகளுக்குப் புதிய வெள்ளை நிற ஆடைகளை அணிவித்து, தலையில் துப்பட்டா போட்டு, உதடுகளில் துளசி இலைகளை வைத்துப் பூஜை செய்துள்ளார்.
அறையிலும் பிரிட்ஜூகுள்ளும் சாக்லேட்டுகளை வைத்து, பிரிட்ஜ் கதவில் “ஹேப்பி பர்த்டே ஹிமான்ஷி” என்று காகிதத்தில் எழுதி ஒட்டியுள்ளார்.
அன்று குழந்தைக்குப் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும் அவர் இப்படி செய்துள்ளார். இதைச் செய்து பின், மகளை மூச்சு திணறச் செய்து கொன்று பிரிட்ஜில் வைத்துள்ளார்.
இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள ராஜுலா காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.