• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

டாமி ஜோ ஷல்ட்ஸ்: நடுவானில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை காப்பாற்றிய பெண் விமானி – யார் இவர்?

Byadmin

Jun 7, 2026


டாமி ஜோ ஷல்ட்ஸ், அமெரிக்கா, விமான விபத்து

பட மூலாதாரம், US Navy/PH2 Thomas P. Milne/Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க கடற்படையின் போர் விமானங்களை இயக்கிய முதல் சில பெண்களில் டாமி ஜோ ஷல்ட்ஸும் ஒருவர்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டாமி ஜோ ஷல்ட்ஸ் போர் விமானங்களை இயக்க வேண்டும் என்று பெரிதும் கனவு கண்டார்.

அவர் 1960களில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ஹாலோமேன் விமானப் படைத் தளத்திற்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் வளர்ந்தார். பண்ணைக்கு மேலே விமானங்கள் சத்தம் எழுப்பிக் கொண்டு பறப்பதைப் பார்க்க அவர் மிகவும் விரும்பினார்.

பறப்பது என்பது அவருக்கு மாயாஜாலம் போலத் தோன்றியது. அவர் பண்ணையில் கடினமாக உழைத்தார், ஒன்பது வயதிலேயே டிராக்டர் ஓட்டத் தொடங்கினார்.

அவரது பெற்றோர் ஆண்களுக்கான வேலை, பெண்களுக்கான வேலை என்று பாகுபாடு காட்டவில்லை. அவருக்குப் பொருத்தமான ஒரு தொழிலைத் தேர்வு செய்யுமாறு ஷல்ட்ஸை ஊக்குவித்தனர்.

எனவே, ஷல்ட்ஸ் தனது தாயாரிடம், “நான் போர் விமானங்களை இயக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அதற்கு அவரது தாய், “டாமி, அவர்கள் மிகவும் புத்திசாலிகள்” என்று பதிலளித்தார்.

By admin