• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

டாமி ராபின்சன் பங்கேற்ற ஆக்ஸ்போர்டு நிகழ்வுக்கு எதிர்ப்பு: நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

Byadmin

Jun 19, 2026


இங்கிலாந்தில் தீவிர வலதுசாரி அரசியல் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் டாமி ராபின்சன் (Tommy Robinson) பங்கேற்ற நிகழ்வுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Oxford Union ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்வில், “இஸ்லாத்தின் மீது சந்தேகம் கொள்வது மேற்கத்திய நாடுகளுக்குச் சரிதான்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தலைப்பு, சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவாதத்தில் டாமி ராபின்சனுடன், முன்னாள் நடிகரும் அரசியல் செயற்பாட்டாளருமான Laurence Fox பங்கேற்க இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நிகழ்வு நடைபெறவிருந்த செயின்ட் மைக்கேல் தெருவின் இருபுறங்களிலும் பெருமளவான போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகள் ஏந்தியதுடன், முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் “வெட்கம், வெட்கம்” என முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வு, இங்கிலாந்தில் கருத்து சுதந்திரம், மத உணர்வுகள் மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான விவாதங்களை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

டாமி ராபின்சன் பங்கேற்ற ஆக்ஸ்போர்டு நிகழ்வுக்கு எதிர்ப்புடாமி ராபின்சன் பங்கேற்ற ஆக்ஸ்போர்டு நிகழ்வுக்கு எதிர்ப்பு

By admin