• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

40 ஏக்கர் தோட்டத்தில் காணாமல் போன சிறுமி; 10 நாட்களுக்கு மேலாகியும் கிடைக்காதது ஏன்?

Byadmin

Jun 19, 2026


தந்தையைத் தேடிச்சென்று காணாமல் போன இரண்டு வயது சிறுமி
படக்குறிப்பு, நாட்கள் கடந்தும் அந்தச் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.

    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காக்கிநாடா மாவட்டம், தொண்டவாகா பஞ்சாயத்து சி.ஹெச். அக்ரஹாரத்தில் உள்ள ஒரு எண்ணெய் பனை தோட்டத்தில் தனது தந்தையைத் தேடிச் சென்றபோது காணாமல் போன இரண்டு வயது சிறுமி ஞானேஸ்வரியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாட்கள் கடந்தும் அந்தச் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்டிஆர்எஃப்), தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) குழுக்கள், ட்ரோன்களை இயக்கும் ஹனுமான் குழுக்கள், போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து 40 ஏக்கர் எண்ணெய் பனை தோட்டம் மற்றும் 500 ஏக்கர் மலைப் பகுதியில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சாதகமற்ற வானிலை நிலவிய போதிலும் சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.

சிறுமி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டதிலிருந்து போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

எண்ணெய் பனை தோட்டங்கள், புதர்கள், கால்வாய்கள், குளங்கள், கிணறுகள், பாழடைந்த வீடுகள் என, அந்தச் சிறுமி இருக்கக்கூடும் எனக் கருதப்படும் ஒவ்வொரு இடமும் சோதிக்கப்பட்டு வருகிறது.

By admin