• Thu. Apr 16th, 2026

24×7 Live News

Apdin News

டிசிஎஸ் ஊழியர்கள் மீது பாலியல் கொடுமை குற்றச்சாட்டு – 9 முதல் தகவல் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?

Byadmin

Apr 16, 2026


இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
படக்குறிப்பு, இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் எட்டு பெண்கள் மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தங்களது அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மிரட்டப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மற்றும் மன ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் அந்தப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுவரை இந்த விவகாரத்தில் மொத்தம் 9 முதல் தகவல் அறிக்கை பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஊழியர்கள், மனிதவளத்துறையைச் சேர்ந்த சில நபர்கள் என பலர் அடங்குவர்.

பாலியல் வன்கொடுமை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி பழகுதல், மோசடி மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதேசமயம் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு பெண் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin