• Sun. Apr 26th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச்சூடு; என்ன நடந்தது? – சமீபத்திய தகவல்கள்

Byadmin

Apr 26, 2026


டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

வெள்ளை மாளிகை நிருபர்களுடான விருந்தின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய சேவையால் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அந்தச் சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வாஷிங்டன் ஹில்டன் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வெடிப்புச் சத்தம் கேட்ட உடனேயே அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து டிரம்பை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

டிரம்ப் உடன் அவரின் தலைமை ஆலோசகர் ஸ்டிபன் மில்லர் உட்பட பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை ரகசிய சேவை அதிகாரிகள் மேடையிலிருந்து அழைத்துச் சென்றதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

By admin