நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.. சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத தமிழகத்தில் 2 லட்சம் மாணவ- மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. டாக்டர் ஆக வேண்டும் என்று கனவோடு உள்ள மாணவ-மாணவிகள் ‘நீட்’ நுழைவுத்தேர்வை எழுத காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ‘நீட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான nect.nta.nic.in -ல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான NEET தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு நாளை (ஏப்.27) காலை 10 மணிக்கு ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இன்று ஹால் டிக்கெட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தேதியை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.